விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய விளையாட்டு மற்றும் உடல் நல ஆரோக்கிய விருத்தி தேசிய வாரத்திற்கான மரதனோட்டப் போட்டியில் பிரதேச இளைஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பிரதேச செயலாளர் தலைமையில் விளையாட்டு உத்தியோகத்தர், இளைஞர் சேவை உத்தியோக்கத்தர் ஆகியோரின் வழிகாட்டலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர், கணக்காளர் மற்றும் பிரதேச உத்தியோகஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டு போட்டியில் பங்குபற்றி வெற்றியீட்டிய இளைஞர்களுக்கு பசில்களை வழங்கி வைத்தனர்.






























