என சிரேஸ்ட ஊடகவியலாளரும் கிழக்கு மாகாண ஊடகவியலாளர் சம்மேளனத்தின் ஆலோசகருமான இளையதம்பி பாக்கியராசா தெரிவித்தார்.
மட்டக்களப்பு கல்லடியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (17) இடம்பெற்ற, கிழக்கு மாகாண ஊடகவியலாளர் சம்மேளனக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் பேசுகையில்,
ஊடகவியலாளர்களுக்கு ஒற்றுமை என்பது மிக அவசியம். ஊடகவியலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் எத்தனை சங்கங்கள் இருந்தாலும் பறவாயில்லை, நாம் அனைவரும் ஒற்றுமையான உறவுகளை வளர்த்துக்கொள்ளவேன்டும்.
பொதுவாக பலர் மக்கள் குறைபாடுகளை சுட்டிக்காட்டி மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை வௌிக்கொணர்கின்றனர். அத்துடன் நமது சேவை அல்லது கடமை முடிந்துவிட்டது என்று இருந்துவிடக்கூடாது. நம்மால் முடியுமானவரை செய்யக்கூடிய சிறுசிறு சேவைகளை செயற்பாட்டிலும் செய்துகாட்டவேன்டும். என தெரிவித்தார்.












