சுகாதார பரிசோதகரின் வீட்டில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் தீக்கிரை.

நேற்று நள்ளிரவு 12 மணியளவில் மட்டக்களப்பு நாவற்குடா, மேல்மாடி வீதியில் வசிக்கும் சுகாதார பரிசோதகர் சங்கர் அவர்களின் வீட்டில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் விஷமிகளால் தீக்கிரை செய்யப்பட்டுள்ளன.   .

இத்தன்மையான காரியங்களுக்கு உரிய சட்டநடவடிக்கை மூலம் குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும்.  

அண்மையில் பல்வேறுபட்ட சுகாதார முறைகேட்டு நடவடிக்கைகளை  துணிவுடன் முன்னெடுத்துக்கொண்டிருபதால் அதனால் பாதிக்கப்பட்டவர்களில் யாரேனும் இந்த விஷமச் செயலைச் செய்திருக்கலாம் என  சந்தேகிக்கின்றனர். எனவே சட்டத்தின் பிடியில் நல்லாட்சி அரசாங்கத்தில் விஷமிகள் தண்டனைக்குட்படுத்தப்படவேண்டும்.