(ஹுஸைன்)திருகோணமலை வெருகல் பிரதேச செயலகத்திற்கு முன்பாக கிராம ஒன்று கூடி தமது பிரதேச வைத்தியசாலைக்கு வைத்தியர் ஒருவரை நியமிக்குமாறும் நாதன் ஓடை அணைக்கட்டை சீரமைத்து வெள்ளப் பெருக்கைத் தடுத்து நிறுத்துமாறு கோரியும் ஆர்ப்பாட்டம் ஒன்றில் திங்களன்று காலை ஈடுப்பட்டனர்.
ஈச்சிலம்பற்று பிரதேச வைத்தியசாலை கடந்த இரண்டு மாதங்களாக வைத்தியர் எவருமின்றி இயங்கி வருவதால் பிரதேச நோயாளிகள் பெரிதும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.
அத்தோடு, நாதனோடை எனும் அணைக்கட்டு தகுந்த முறையில் நிருமாணிக்கப்பட்டு பராமரிக்கப்படாததால் வெள்ளப் பெருக்கு ஏற்படுவதோடு விவசாயச் செய்கையும் பாதிப்படைகின்றது.
என்ற கொரிக்கைகளை முன்வைத்தே ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
ஆர்பபாட்டம் இடம்பெற்ற இடத்திற்கு நேரில் சென்ற கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர், உடனடியாக சேருநுவர வைத்தியசாலையிருந்து ஒரு வைத்தியரை ஈச்சிலம்பற்று வைத்தியசாலைக்கு விடுவித்துள்ளார்.
நாதனோடை அணைக்கட்டு விவகாரத்தையும் தாங்கள் கவனத்திற் கொள்வதாக அமைச்சரும் அதிகாரிகளும் உறுதியளித்துள்ளனர்.
இதனால் ஆர்ப்பாட்டம் முடிவுக்கு வந்தது.















