அண்மையில் வெளியான க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் படி கல்குடா கல்வி வலயத்தில் வாழைச்சேனை கறுவாக்கேணி விக்னேஸ்வரா மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பாடசாலைக்கும் வலயத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்கள்.
மொத்தமாக 14 மாணவர்கள் கலைப் பிரிவில் பரீட்சைக்குத் தோற்றிய நிலையில் அவர்கள் அனைவரும் சித்தியடைந்து பல்கலைக்கழகம் செல்லும் தகுதியினைப் பெற்றுள்ளதுடன், அவர்களில் ஆறு மாணவர்கள் பல்கலைக்கழகம் சென்று கற்கும் வாய்ப்பிற்குரியவர்களாகியுள்ளனர்.
இவர்களுள் அருள்ரதி சுப்பிரமணியம் எனும் மாணவி 3A சித்திகளுடன் மாவட்ட மட்டத்தில் எட்டாம் இடத்தைப் பெற்றுள்ளார். மற்றும் ரக்சனா கந்தசாமி, தேவமலர் சிவகுமார், அரியசாந்தினி அரியராசா, பிரதீபா செல்வசிங்கம், இதயமலர் ராசன் ஆகியோர் முறையே 55,56,119,135,184 ஆவது இடங்களைப் பெற்று பல்கலைக் கழகம் சென்று கற்கும் வாய்ப்பினைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.















