மட்டக்களப்பு பாடுமீன் லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் சியானி தொழிற்பயிற்சி நிலையம் வழங்கும் 'அழகுக் கலையும் கேக் ஐசிங் கண்காட்சி' நிகழ்வு இன்று மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரி பிரதான மண்டபத்தில் ஆரம்பமானது. இது 09.01.2016 - 10.01.2016 ஆகிய இரு தினங்களுக்கு காலை 10:30 மணி தொடக்கம் மாலை 5:00 மணிவரை இடம்பெறவுள்ளது.இக் கண்காட்சி ஆரம்ப நிகழ்வில் பிரதம அதிதியாக வலயக்கல்விப் பணிப்பாளர் பாஸ்கரன் அவர்களும், விசேட அதிதிகளாக சபேசன் (தொழில்பயிற்சி அதிகார சபை), கவிதாசன் (இயக்குனர்- NACS மேலாண்மைக் கல்வி நிறுவகம்), ஜோதிரத்தினம் (ஓய்வுபெற்ற கணக்காளர், தபால்த் திணைக்களம்- மட்டக்களப்பு), பாடுமீன் லயன்ஸ் கழகத் தலைவர் ஆகியோர் கலந்துகொண்டு இக் கண்காட்சியைத் திறந்து வைத்தனர்.
































