மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்க பொதுக்கூட்டமும் இதுவரை பதிவு செய்யாத பட்டதாரிகளை பதிவு செய்தலும்.

(படுவான் பாலகன்) மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் பொதுக்கூட்டமானது நாளை(03.01.2016) மு.ப. 09.30மணிக்கு மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சி கலாசாலை மண்டபத்தில் தலைவர் உ.உதயவேந்தன் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது. 

இக்கூட்டத்திற்கு அனைத்து வேலையற்ற பட்டதாரிகளும் கலந்து கொள்ளுமாறு அழைப்புவிடுக்கப்படுகின்றது.

இதில் பிரதமருக்கு சமர்ப்பிக்கப்படவேண்டிய விண்ணப்பப்படிவம் வழங்கப்படுவதுடன் இதுவரை சங்கத்தில் பதிவுசெய்யப்படாத பட்டதாரிகளை பதிவு செய்யும் நடவடிக்கையும் இடம்பெறும். பதிவினை மேற்கொண்டவர்கள் விண்ணப்ப கட்டணமாக ரூ.100ஐயும், பதிவினை மேற்கொள்ளாதவர்கள் விண்ணப்பக்கட்டணம், பதிவுக்கட்டணமாக ரூ.200ஐயும் செலுத்த வேண்டும். அத்துடன் பதிவினை மேற்கொள்பவர்கள் தேசிய அடையாள அட்டை, பட்ட உறுதிச்சான்றிதழ் ஆகியவற்றின் போட்டோ பிரதியுடன் அவசியம் கலந்து கொள்ளுமாறு சங்கத்தின் செயலாளர்  குறிப்பிட்டார்.