(ரவிப்ரியா) மண்முனைப்பற்று ஆரையம்பதி கலாசாரப் பேரவையினால் நடாத்தப்பட இருக்கும் கலாசார விழாவினை முன்னிட்டு, கலாசார பேரவைக்கான சின்னம் வரைதல், மகுட வாசகம் அமைத்தல், பிரதேச கலாசார கீதம் அமைத்தல் ஆகிய மூன்றுவிதமான போட்டிகளை நடாத்தி அதற்குபெறுமதியான பரிசுகளையும் வழங்க இருக்கின்றனர்.
பிரதேசத்தின் தனித்துவத்தையும் பெருமையையும் உணர்த்துவதாக இவை அமைக்கப்பட வேண்டும். இப் போட்டியில் பிரதேசத்திற்கு உட்பட்டவர்கள் மற்றும் இங்கு பிறந்தவர்கள் பங்குபற்றலாம்.; விண்ணப்பங்கள் 15.02.2016ந் திகதிக்கு முன்னர் கிடைக்கக் கூடியதாக பிரதேச செயலாளர் பிரதேச செயலகம், ஆரையம்பதி என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். நடுவர் குழுவினால், ஆக்கங்கள் பரிசீலிக்கப்பட்டு, சிறந்த ஆக்கங்கள் தெரிவு செய்யப்படும்














