முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுதலைப்புலிகளை தோற்கடித்தமை தொடர்பில் நினைவு கூரப்படுவார். எனினும் போரின் போது மேற்கொள்ளப்பட்ட குற்றங்களை மறக்க முடியாது. இலங்கையின் கடந்த காலத்தில் துப்பாக்கிகள் மௌனம் அடைந்தன. அதேநேரம் கலந்துரையாடல்களும் தமது குரல்களை இழந் திருந்தன என்று மகாத்மா காந்தியின் பேரனும் இலங்கைக்கான இந்திய முன்னாள் தூதுவருமான கோபால கிருஷ்ண காந்தி தெரிவித்தார்.
'வேலுப்பிள்ளை பிரபாகரன் வரலாறாகிவிட்டார். ஆனால், அவரது இலட்சியத்துக்கு என்ன ஆனது? அதுவும் பழைய வரலாற்றுச் சம்பவ மாகிவிட்டதா?- அல்லது தலைமறைவாகியிருந்து
போர்க் குற்றங்களை..அந்த இலட்சியம் மீண்டும் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளுமா?' என்றும் கோபாலகிருஷ்ண காந்தி கேள்வி எழுப்பினார்.
'பிரிவினைவாதம் என்பது உடனடியான நிகழ்ச்சி நிரலிலிருந்து வெளியேறிவிடமுடியும். ஆனால், அந்த உணர்வு மெதுவாக எரிந்துகொண்டிருக்கும் வரையில் அது முற்றாக இல்லாமல் போய்விட்டதாக கூறமுடியாது' எனவும் கோபாலகிருஷ்ண காந்தி சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஓராண்டு பதவிபூர்த்தியை முன்னிட்டு கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு மேலும் அவர் உரையாற்றுகையில்;
வேலுப்பிள்ளை பிரபாகரன் வரலாற்றில் இடம்பெற்றுவிட்டார். அவரின் குறிக்கோளும் வரலாற்றில் இடம்பெற்றுவிட்டது.
ஆனால் வேலுப்பிள்ளை பிரபாகரனின் குழந்தை என்ற காரணத்துக்காக கொடியமுறையில் அந்த குழந்தையை கொன்றதன் மூலம் அந்த குழந்தை பயங்கரமான முறையில் இந்த உலகத்தை விட்டு சென்றுள்ளது.
இதன்மூலம், சமாதானம் அகன்று சென்றது. துப்பாக்கிகள் மௌனமாகின. அதேநேரம் சமாதான பேச்சுக்களின் குரல்களும் மௌனமாகின.
ஆனால், பிரபாகரனின் குறிக்கோள் தற்போதைய நிகழ்ச்சி நிரலில் இருந்து வெளியேறியுள்ளபோதிலும் அது நிரந்தரமாக வெளியேறவில்லை.
சிங்கள இனவாதத்தையும் தமிழ் இனவாதத்தையும் எதிர்கின்றேன். மலையக மக்கள் உட்பட்ட அனைத்து சமூகத்தவர்களுக்கும் நம்பிக்கை உறுதிப்படுத்தப்பட வேண்டும் .
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அரசாங்கத்தை கையேற்றதன் பின்னர், தேசிய சமாதானம் வரும் என்பதில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் தற்போதைய ஆட்சியின் கீழ் இலங்கை நம்பிக்கை தீவாக மாறும் எதிர்காலத்தில் இலங்கை நம்பிக்கை கண்டமாகவும் மாறும் உறுதிப்பாடு உள்ளது.
தமது சொந்த நிலங்களுக்குத் திரும்பிய அவர்கள் பழைய பரஸ்பர சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு புதிய ஆரம்பம், உயர் நம்பிக்கை என்பனவற்றை மீளப் பெறக் கருதியிருந்தமை தெளிவானது. இங்கு 'அதிகரித்த' என்பது முக்கிய சொல்லாகவுள்ளது.
ஆனால் கூட்டிணைவானது பழைய சந்தர்ப்பவாதம் , அரசியல் இசைவாக்கம், தந்திரம் உள்ளடங்கலான பழைமையான அதே விடயங்களால் பழைமையானதாகவே காணப்பட்டன.
ஆசியாவிலுள்ளதை போன்று கணப்பொழுதில் அழிவை ஏற்படுத்தக்கூடிய அரசியல் கூட்டுச் சதி, வெறுப்பில் திட்டம்தீட்டுதல் என்பன தெற்கு ஆசியாவை விடவும் அதிகமாக வேறு எந்த நாட்டிலோ தலைமுறையிலோ எங்குமோ அறியப்படவில்லை. அரசியல் கூட்டுச் சதி, வெறுப்பில் திட்டம் தீட்டுதல் என்பனவற்றின் இரு விளிம்புகளிலும் வஞ்சகமே உள்ளது.
இந்நிலையில் அரசியல் கூட்டிணைவிலுள்ள இரு தரப்பினருமே பிரிவினைவாத கலையில் கலாநிதி பட்டம் பெற்றவர்களாவர்.
எனினும் நம்பிக்கை எனும் பட்டக் கல்வியில் அவர்கள் ஆரம்பப் பாடசாலை மாணவர்களாகவே இருந்தனர்.. அவர்கள் இலங்கையை விட்டு வெளியேற விரும்பவில்லை. உண்மையில் அவர்கள் உடன்படிக்கைகளை துண்டிப்பதற்கான ஏற்பாட்டில் சொற்றொடர்களைக் கூறுகின்றனர். அவை திரைமறைவில் முன்னெடுக்கப்படுகின்றன.
அங்கு கைகள் எவற்றைக் கையாளுகின்றன என்பதை உண்மை வெளிச்சமாகும் நிஜமான நாள் வரை முகம் மறைக்கிறது.
ஆனால் நம்பமுடியாத வகையில் ஒரு வருடத்திற்கு முன்னர் இலங்கையானது உடன்படிக்கைகளை துண்டிப்பது பற்றி அல்லாது தனிப்பட்ட தன்முனைப்புகள் கட்சி தன்முனைப்புகள் என்பவற்றைத் துண்டிப்பதில் ஈடுபட்டது.
அதில் பங்கேற்றவர்கள் அபாயமொன்றில் சம்பந்தப்பட்டிருந்தனர். இது நம்பிக்கை தொடர்பான பிரச்சினையாகும். நம்பிக்கையானது அவர்கள் ஆரம்பிப்பதற்கு முன்னரே இழக்கப்பட்டிருந்தது. சம்பந்தப்பட்டவர்களிடையேயான நம்பிக்கை மிகவும் குறைவாக இருந்தது.
ஜனாதிபதி சிறிசேனாவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் ஆதரவுடன் தமது அபாய களைவு வழிப் பயணத்தை ஆரம்பிக்கத் தீர்மானித்த போது அவர்கள் மனதில் அனைத்தையும் தோற்கடிக்க முடியும் என்ற நம்பிக்கையிருந்தது.
நம்பிக்கையானது விசித்திரமானது. அது செயற்படும் பட்சத்தில் ஒரு பிரபுவைப் போன்று அது நோக்கப்படும். அவ்வாறு இல்லையெனில் அது ஒரு முட்டாளைப் போலவும் ஒரு அரசியல்வாதி போலவும் பிரபலம் இழந்த ஒரு கிரிக்கெட் வீரர் போலவும் அது நோக்கப்படும். இந்தியாவில் சிந்தனையில் மூளை முழுமையாக வளர்ச்சியடையாத அரசியல்வாதிகள் தொடர்பில் பயன்படுத்தப்படும் தலைப்பொன்றை நான் இங்கு உங்களுடன் பகிர விரும்பவில்லை. நம்பிக்கை தொடர்பான இலங்கையின் பரிசோதனைகள் அபாயத்தில் உள்ளன.. அவர்கள் தம்மிடையே அபாயம் தொடர்பில் நியாயமான முறையிலும் துணிச்சலுடனும் பகிர்வதிலேயே அவர்களின் பாதுகாப்பு தங்கியுள்ளது.
தேர்தலில் பிரவேசித்தவர்களில் எத்தனை பேர் நிறைவேற்றதிகார ஜனாதிபதி உள்ளடங்கலான தமது தனியுரிமைகளை இழப்பதாக தெரிவித்திருந்தனர்? எத்தனை பேர் தமது சொந்த நஷ்டத்துக்கு வழி வகுக்கும் சட்ட மாற்றங்களை முன்வைத்தனர்? தமது பாராம்பரியமான ஆலோசனை அறிவுக்கு அப்பால் மாற்றமொன்றுக்கான தமது தயார் நிலை தொடர்பான புதிய நம்பிக்கை குறித்து எத்தனை பேர் துணிச்சலாக செயற்பட்டிருந்தார்கள்?
அவர்கள் முழுமையாகவும் மறுக்கமுடியாத விதத்தில் சரியாகவும் செயற்பட்டுள்ளதை நிரூபித்திருப்பதை நாம் காணக்கூடியதாக உள்ளது. மத, மொழி ,அரசியல் ரீதியல் வேறுபட்ட அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து தனது நாட்டிற்கான தெரிவை மேற்கொள்வதில் ஒன்றிணைந்துள்ளனர்.
அவர்கள் கடந்த காலத்தை மறக்கவில்லை. அவர்கள் கொட்டிய கொடுக்கை அகற்றியுள்ளனர். அவர்கள் வேறுபாடுகளின்றி த சரியான தெரிவை மேற்கொண்டுள்ளனர். அரசியலானது அரசியல் கட்சிகள் பற்றியதல்ல. அது நாட்டைப் பற்றியதாகும்.
இலங்கையின் கடந்த காலத்தில் துப்பாக்கிகள் மௌனம் அடைந்தன. கலந்துரையாடல்களும் தமது குரல்களை இழந்திருந்தன. உடனடியான நிகழ்ச்சி
நிரலில் இருந்து பிரிவினை இல்லாமல் போயிருக்கலாம். உணர்வு பூர்வமான முறை
யில் அந்த விடயம் வெ ளியே செல்ல வில்லை.
இலங்கையின் ஐக்கியத்திற்கும் ஒற்றுமைக்கும் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை விட வேறு எதுவும் சிறந்ததாக இருக்க முடியாது. அதுமட்டுமன்றி இந்தியாவை விட இலங்கைக்கு ஒருசிறந்த நண்பன் இருக்கவும் முடியாது.
அதிகாரப்பகிர்வு மற்றும் ஜனநாயகத்தின் ஆழ்ந்த தன்மை என்பன மிகவும் முக்கியமான தாகும்.