மட்டக்களப்பில் நடைபெற்ற இலங்கை அரசியல் யாப்பு சீர்திருத்த குழு மக்களது தகவல்களை பதிவு செய்தது

(கோபி) மட்டக்களப்பில் இலங்கை அரசியல் யாப்பு சீர்திருத்த குழு மக்களது தகவல்களை பதிவு செய்தது இதில் மட்டக்களப்பு சமாசம் மற்றும் அமரா பெண்கள் வலையமைப்புக்கள் தமது கருத்துகளை வாய் மூலமும். சிபார்சுகளாகவும் வழங்கியமை குறிப்பிடத்தக்க விடையமாகும்.
மேலும் அமரா தலைவி அவர்களால் வட மாகாண சபை எதிர்கட்சி தலைவர் தவராசா அவர்களிடம் விதவைகள் பட்டயம் கையளிக்கப்பட்டமையும் சிறப்பம்சமாகும்.



மட்டக்களப்பு சமாசம் மற்றும் அமரா பெண்கள் வலையமைபடபுக்களால் முன்வைக்கபட்ட சிபார்சுகள்.
  1. மொழிக்கொள்கையில் மாற்றம் கொண்டு வரப்படல்-1956 தனிச் சிங்களச் சட்டம்.1978 அரசியல் யாப்புச் சட்டமாக மாறியது-ஆனால் இலங்கை பிரதானமாக 02 மொழிகளை கொண்டுள்ளது.
  2. மதக் கொள்கையில் மாற்றம் கொண்டு வரப்படல்-அரச கரும மதமாக பௌத்த மதம் காணப்படுகின்றது. மேலும் தேசிய பாதுகாப்பு படை முகாம்களில் கடமை புரியும் இராணுவ வீரர்கள் பௌத்த மதத்திற்கு மாத்திரம் முன்னுரிமை அளிக்கின்றனர். உயர் பதவிகளை பெறுபவர்கள் பௌத்த மத தலைவர்களின் வணக்கத்திற்கே முன்னுதரிமை அளிக்கின்றனர் இதில் மாற்றம் இடம்பெற வேண்டும்.
  3. தேசிய கொடியில் பௌத்த மதத்திற்கு மாத்திரம் இடம் பெறும் தன்மையில் மாற்றம் கொண்டுவரல் உதாரணம்-நான்கு அரச இலைகள் பௌத்த மதமும் நாட்டில் அதன் செல்வாக்கும் பற்றியே விபரிக்கின்றது.
  4. நிறைவேற்று அதிகாரம் பொருந்திய ஜனாதபதி முறை ஒழிக்கப்படல்-மாறாக பாராளுமன்றத்திற்கு பொறுப்புச் சொல்லக் கூடிய நிர்வாக தலைவரை உருவாக்கல்.
  5. PTA சட்டம் ஒரு காலமும் திருத்த மூலம் கொண்டுவருவதன் மூலம் செயற்படுத்த முடியாத அளவிற்கு திருத்தம் கொண்டு வரல்.
  6. அரசியல் ஜாப்பில் இன முரண்பாடு சம்மந்மாக திருத்த மூலம் கொண்டு வருவதாயின் நீதி மன்றத்திற்கு நீதி புணராய்வு செய்யும் அதிகாரத்தினை விசேடமாக வழங்கல்-வலு வேறாக்கம்-சமவலுச்சமன்பாடு-USA
  7. 13 வது திருத்தினை அரசியல் யாப்பில் உள்ளீடு செய்தல்-முழுமையாக
  8. தேசிய பட்டியலில் கட்சிகள் பெண்களுக்கான ஒதுக்க முறையை கடைப்பிடிக்க கூடிய வித்தில் கட்டாயமாக்குதல்
  9. சிறுவர்.பௌ;கள் துஸ்பிரயோகத்தில் ஈடுபடுபர்களுக்கு தண்டணை 03 மாதகாலத்தில் வழங்க வேண்டும் குற்றவாளியின் மேன் முறையீடு ஒரு மாத காலத்தில் கவனத்தில் கொள்ளப்பட்டு தண்டளை துரிதகதியில் வழங்க ஆவணை புரிய வேண்டும்.
  10. காணமல் போகச் செய்யப்பட்டவர்களின் பெயர் விபரங்களை அரசே வெளியிட்டு அடிப்படை உரிமை உறுதி செய்யப்பட வேண்டும்.
  11. வலு வேறாக்கத்தில் நிர்வாகத்துறை-சட்டத்துறை தலையீடுகள் காணப்பட்டாலும் நீதித்துறையில் தலையீடு முற்றாக தவிர்க்கப்படல்-முன்னய அரசு காலத்தில் சிராணி பண்டாரநாயக்க விடயத்தில் பாராளுமன்றமே அதிகாரம் பொருந்தியது என ஆட்சியாளர்களால் நிருபிக்கப்பட்டமை.
  12. பெண்களின் அரசியல் பிரதிநித்துவம் 25 வீதம் கட்சிகள் ஒதுக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்படல்.
  13. சிறுபாண்மையினங்கள் வாழும் பிரதேசங்களில் அரச நிகழ்வுகளில் அரச தலைவர்கள் கலந்து கொண்டாலும் சரி தேசிய கீதம் சிறுபாண்மையினங்களில் சொந்த மொழியிலே இசைப்பதற்கு உறுதி செய்தல்.