மத்தியமுகாமில் 68 வது சுதந்திரதின நிகழ்வுகள்

(ரவிகுமார்) இலங்கையின் 68வது சுதந்திரதினத்தை முன்னிட்டு மத்தியமுகாம் பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் மாபெரும் வீதி ஊர்வலமும் சமய நிகழ்வுகளும் 2016/02/04 நடைபெற்றது. இவ் ஊர்வலத்தில் தமிழ், சிங்களம், இஸ்ஸாம் போன்ற மதங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல வாகனத் தொடரணிகள் கலந்து கொண்டதோடு பல மதத் தலைவர்களும் பொதுமக்களுமாக அதிகமானோர் கலந்து கொண்டனர். மத்தியமுகாம் பிரதேச வீதிகளில் வலம்வந்த இவ் ஊர்வலத் தொடரணியில் கலைநிகழ்வுகள் பலவும் இடம்பெற்றன.