ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் கிழக்கிற்கும் விஜயம்

நான்குநாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஐ.நா ஆணையாளர் செயிட் அல் ஹுசைன், இன்று (ஞாயிற்றுக்கிழமை) கிழக்கு மாகாணத்திற்;கும் விஜயம் செய்துள்ளார்.

இன்று பிற்பகல் 2.30 மணியளவில் கிழக்கிற்குச் சென்ற ஐ.நா ஆணையாளர், கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட்டை அவரது காரியாலயத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.



இச்சந்திப்பில், கிழக்கு மாகாண கல்வியமைச்சர் சி.தண்டாயுதபாணி, கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் ச.துரைராஜசிங்கம் மற்றும் கிழக்கு மாகாண காணி அமைச்சர் ஆரியவதி கலபதி ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

அதனையடுத்து கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோவை சந்தித்து கிழக்கு நிலவரங்கள் குறித்து கலந்துரையாடியதோடு, திருகோணமலையிலுள்ள சிவில் சமூகப் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடியதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.