2005ஆம் ஆண்டு மாசி மாதம் 7ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலில் 8ஆம் திகதி மரணமான தமிழ்க் கூட்டமைப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநாயகம் சந்திரநேருவின் 11ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றாகும்.
வெலிக்கந்தையில் விடுதலைப:புலிகளின் மட்டு. அம்பாறை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் கௌசல்யன் உட்பட இன்னும் பலருடன் வாகனத்தில் பயணம் செய்த வேளை நடத்தப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்து பொலநறுவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமானார்.
இவரது மரணம் அம்பாறை மாவட்ட தமிழ் மக்களுக்குப் பேரிழப்பாக இருந்தது.
06.4.1944 ல் பிறந்த இவர் தந்தை அறப்போர் அரியநாயகத்தை போன்று தமிழினத்தின் உரிமைக்காக பாடுபட்டு உழைத்தார்.
அரியநாயகம் சந்திரநேரு (15 அக்டோபர் 1944 - பெப்ரவரி 8, 2005) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தொழிலதிபரும் ஆவார். மனித உரிமைகளுக்கான வட கிழக்கு செயலகத்தின் நிறுவன உறுப்பினராக இருந்தவர்.
2001 நாடாளுமன்றத் தேர்தலில் சந்திரநேரு அம்பாறை மாவட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராகப் போட்டியிட்டு 26,282 விருப்பு வாக்குகள் பெற்று வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார். 2004 தேர்தலில் போட்டியிட்டு 25,572 விருப்பு வாக்குகள் பெற்றுத் தோல்வியடைந்தார்.
விடுதலைப் புலிகள் அமைப்பு சந்திரநேருவிற்கு மாமனிதர் விருதுகளை வழங்கிக் கௌரவித்தது.

அரியநாயகம் சந்திரநேருவின் தந்தை 'அறப்போர்' கே. ஏ. டபிள்யூ. அரியநாயகம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தீவிர ஆதரவாளர்.
சந்திரநேரு ஆரம்பத்தில் கல்பிட்டி மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றினார். பின்னர் அரச சேவையில் இருந்து விலகி மாலைதீவுக் கப்பல் ஒன்றில் இரண்டாம் தர அதிகாரியாகப் பணியில் சேர்ந்தார்.
ஆறு ஆண்டுகளில் கப்பல் காப்டனாக பதவி உயர்வு பெற்றார். பல ஆண்டுகள் மாலைதீவுக் கப்பலில் பணியாற்றினார். இக்காலத்திலேயே அவர் திருமணம் புரிந்தார்.
எண்பதுகளின் நடுப்பகுதியில் விடுமுறையில் நாடு திரும்பிய போது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பூசா தடுப்பு முகாமில் ஓராண்டுக்கும் மேலாகத் தடுத்து வைக்கப்பட்டார். சிறை வாழ்க்கை அவரை தமிழ்த் தேசியத்தின் பால் ஈர்த்தது. ஆயுதப் போராட்டத்திற்கு ஆதரவளிக்க ஆரம்பித்தார்.1990களில் இறுதியில் பணியில் இருந்து ஓய்வு பெற்று திருக்கோவில் திரும்பினார்.