(சுகிவர்ணன்)
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட அமிர்தகழி ஸ்ரீ சித்தி வினாயகர் மகா வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி மட்டிக்கழி விளையாட்டு மைதானத்தில் பாடசாலை அதிபர் திருமதி என்.தர்மசீலன் தலைமையில் நேற்று 17ம் திகதி இடம்பெற்றது.
இப் போட்டி நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாநகர அணையாளர் எம்.உதயகுமார் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
இந் நிகழ்வில் கங்கை, ஜமுனை , காவேரி ஆகிய மூண்று விளையாட்டு இல்லங்களைச்சேர்ந்த மாணவர்கள் விளையாட்டில் கலந்துகொண்டனர். இதில் ஜமுனை இல்லம் முதலாம் இடத்தினைப் பெற்றுக்கொண்டது.
இப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற மாணவர்களுக்க இங்கு வருகைதந்த அதிதிகளால் பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டது.










































