(படுவான் பாலகன்) கன்னன்குடா மகா வித்தியாலய இல்லங்களுக்கிடையிலான மெய்வல்லுனர் திறனாய்வு போட்டியின் இறுதி நிகழ்வு இன்று(11) வியாழக்கிழமை வித்தியாலய அதிபர் தி.புலேந்திரகுமார் தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது அதிதிகள் வேன்ட்வாத்தியத்துடன் அழைக்கப்பட்டு தேசிய கொடி, பாடசாலைக்கொடி, இல்லங்களின் கொடி என்பன ஏற்றப்பட்டு தேசியகீதம் இசைக்கப்பட்டது. தொடர்ந்து ஒலிம்பிக்தீபம் ஏற்றல், சத்தியபிரமாணம் அணிநடை மரியாதை என்பனவும் இடம்பெற்றது.
மேலும் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றார், பழைய மாணவர்கள் ஆகியோருக்கான விளையாட்டுக்கள், உடற்பயிற்சி கண்காட்சி போன்றனவும் இடம்பெற்றது.
இங்கு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும், வெற்றிக்கிண்ணங்களும், பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் விளையாட்டு மைதானத்தின் வளர்ச்சிக்கு பங்காற்றிய மண்முனை மேற்கு பிரதேசசெயலாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், மண்முனை மேற்கு பொலிஸ் பொறுப்பதிகாரி ஆகியோரை கௌரவித்து பொன்னாடை போர்க்கப்பட்டது.
இதில் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகரன், செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் த.நிர்மலராஜ், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.ரி.நஸீர், கோட்டக்கல்விப் பணிப்பாளர் த.சோமசுந்தரம், உடற்கல்வி உதவிக்கல்விப் பணிப்பாளர் எஸ்.சந்திரகுமார், கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகள், மாணவர்கள், ஆசிரியர்கள், பாடசாலை சமூகத்தினர், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.