பட்டிருப்பில் அமைச்சர் ரிஷாட் பதுர்தீனால் பாலர் பாடசாலைக் கட்டடம் திறந்து வைக்கப்பட்டது

பட்டிருப்பில் புதிதாக அமைக்கப்பட்ட சித்தி விநாயகர் பாலர் பாடசாலைக் கட்டடம் கைத்தொழில் வாணிப அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிறஸ் தேசிய தலைவருமான ரிஷாட் பதுர்தீனால் நேற்று (28.02.2016) திறந்து வைக்கப்பட்டது.

கிராமத் தலைவர் கி.குணபாலனின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ் அமீர் அலி, அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம் சாள்ஸ், பட்டிருப்புத் தொகுதி ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர் சோ.கணேசமூர்த்தி மற்றும் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் உத்தியோகத்தர்கள், பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள், வைத்தியர்கள், திணைக்களத் தலைவர்கள், கிராமத்தின் அமைப்புக்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இக்கட்டடம் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ் அமீர் அலி அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.