(சுகிவர்ணன்)ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக, போதைகள் அற்ற கிராமங்களை உருவாக்கும் வேலைத்திட்டம் இன்று வியாழக்கிழமை (25)மட்டக்களப்பில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவின் திராய்மடு கிராமம் இதன் மாதிரிக் கிராமமாக தெரிவுசெய்யப்பட்டது.
இக் கிராமத்தை போதைகள் அற்ற கிராமமாக மாற்றும் வேலைத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வினை மட்டக்களப்பு மாவட்ட வாழ்வின் எழுச்சி திணைக்கள பணிப்பாளர் பி.குணரெட்ணம் அவர்கள் அதிதியாக கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தார்.
இக் கிராமத்தை போதைகள் அற்ற கிராமமாக மாற்றும் வேலைத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வினை மட்டக்களப்பு மாவட்ட வாழ்வின் எழுச்சி திணைக்கள பணிப்பாளர் பி.குணரெட்ணம் அவர்கள் அதிதியாக கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தார்.
இதன்போது, மாவட்ட வாழ்வின் எழுச்சி தலைமை முகாமையாளர் ஜே.எவ்.மனோகிதராஜ் மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலக வாழ்வின் எழுச்சி முகாமைத்துவப் பணிப்பாளர் திருமதி கே.நிர்மலா, கிராம உத்தியோகத்தர் நேசதுரை மற்றும் வாழ்வின் எழுச்சி உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.
''மைத்திரி ஆட்சி நிலையான நாடு'' எனும் தொனிப்பொருளுக்கமைய மேற்படி திட்டம் அமைந்திருந்தது. இதன்போது போதைப்பொருள் பாவனையை தடுக்கும் வாசகங்கள் மற்றும் போதைப்பொருள் பாவனையினால் ஏற்படும் பாதகமான விளைவுகள் அடங்கிய துண்டுப்பிரசுரங்களும் இக் கிராம மக்களுக்கு வழங்கப்பட்டது.























