தன்னாமுனை மயிலம்பாவெளியில் விபத்து.

(சுபஜன்)
மட்டக்களப்பு தன்னாமுனை மயிலம்பாவெளி பிரதான வீதியில் விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று (29) மாலை 5.00 மணியளவில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது. மோட்டார்சைக்கிள் முச்சக்கர வண்டி ஒன்றுடன் மோதுண்டே விபத்துக்குள்ளாகியது. விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி ம.டிலக்சன் வயது(19) பலத்த காயங்களுடன் ஏறாவூர் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் சிறுகாயங்களுடன் காணப்பட்டதாக ஏறாவூர் பொலிசார் தொரிவித்தனர். இது தொடர்பில் தாம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறினர்.