கடந்த செவ்வாய்க்கிழமை பண்டாரியாவெளி நாமகள் வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமது சமுகத்தின் அடுத்த எதிர்பார்ப்பு கல்வியில் தான் தங்கியிருக்கின்றது. அதற்கு பெற்றோர்கள் பாரிய தியாகம் செய்தல் வேண்டும். நாம் விதைப்பதைத் தான் அறுவடை செய்யலாம். எனவே பிள்ளைகளிடமிருந்து நாம் கல்வியை அறுவடை செய்து எடுக்க வேண்டிய கடமையுள்ளவர்களாக இருக்க வேண்டும். இந்தப் பிள்ளைகளை இந்த ஊரின் எமது இனத்தின் நாட்டின் சொத்துக்களாக மாற்றுகின்ற பொறுப்பு பெற்றோர்களுக்குத் தான் உண்டு.
இந்த நாட்டின் அரசியல் திட்டத்தில், அதிகாரப் பரவலாக்கலில் ஒரு மைல்க்கல்லாக 13வது திருத்தம் வந்து மாகாண சபைகளும் அமைக்கப்பட்டதன் பின்பும் கூட இன்னும் கஜானாவைத் தங்களுடைய கையிலே வைத்திருக்கின்ற கைங்கரியத்தைத் தான் இந்த நாட்டு அரசாங்கங்கள் செய்து கொண்டிருக்கின்றது. அங்கிருந்து கைபிசகுவதென்பது மிகவும் கடினமான காரியமாக இருக்கின்றது.
இருந்த போதிலும் கூட தற்போது பெயரளவிலாவது நல்லாட்சி என்று சொல்லப்படுகின்ற ஒரு நிலைமை இருப்பதானால் அந்த விடயத்தை வைத்துக் கொண்டு மத்திய அமைச்சர்களை நாம் அணுக முடியும் அவர்களிடமிருந்து பலன் பெறமுடியும் என்ற நம்பிக்கையும் எமக்கு இருக்கின்றது. அந்த வகையில் எமது மக்களுக்கு எவ்வாறாயினும் உதவுவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம். என்று தெரிவித்தார்.












