செங்கலடி கொம்மாதுறையில் விபத்து,

(சுபஜன்) செங்கலடி ஏறாவூர் பொலீஸ் பிரிவிற்குட்பட்ட  கொம்மாதுறை பிரதான வீதியில்  மோட்டார் சைக்கிள் மற்றும் ஆட்டோ என்பன மோதுண்டு விபத்துக்குள்ளான சம்பவம் இன்று(24) மாலை  8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்தவர் செங்கலடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.