(படுவான் பாலகன்) கிழக்கு பல்கலைக்கழக விபுலானந்த கற்கை நிறுவகத்தில் உலகதாய் மொழி தின நிகழ்வுகள் நேற்று(21) ஞாயிற்றுக்கிழமை கற்கை நிறுவகத்தில் இடம்பெற்றது.
தாய்மொழியின் முக்கியத்துவம், புலிக்கூத்து, மட்டக்களப்பில் காணப்படும் வேடர், தெலுங்கர், பறங்கியர் சமூகத்தின் ஆற்றுகைகள் என்பனவும் காட்சிப்படுத்தபட்டிருந்ததுடன், பதாதைகளும் வைக்கப்பட்டிருந்தன.
பல்வேறு கட்டங்களாக காலை 09மணி தொடக்கம் மாலை 09மணிவரை இடம்பெற்ற இந்நிகழ்வுகளில் தாய்மொழியின் முக்கியத்துவம், அதன்வளர்ச்சி, மட்டக்களப்பில் காணப்படும் தெலுங்கர், வேடர், பறங்கியர் சமூகத்தினர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அவர்களின் மொழிப்பிரியோகம் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல்களும் இடம்பெற்றது.
மேலும் கலை, இசை நிகழ்வுகளும்; இடம்பெற்றதுடன் செய்திமடல் ஒன்றும் வெளியிடப்பட்டது. இதன் முதல் பிரதியை நிறுவகத்தின் பணிப்பாளர் சி.ஜெயசங்கர் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி க.ஜெயசிங்கத்திற்கு வழங்கி வைத்தார்.
நிறுவகத்தினுடைய பணிப்பாளர் கலாநிதி சி.ஜெயசங்கர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் க.ஜெயசிங்கம், பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், உத்தியோகத்தர்கள், மாணவர்கள், சமூகத்தினர் கலந்து சிறப்பித்தனர்.
























