ஓலைச்சுவடு, நடுகல், கல்வெட்டு, செப்பேடுகளில் தமிழ்மொழி என்ற தலைப்பில் கிழக்கு பல்கலைக்கழகத்தில் கலந்துரையாடல்

(படுவான் பாலகன்) கிழக்கு பல்கலைக்கழக நுண்கலைத்துறையின் ஏற்பாட்டில் உலக தாய்மொழி தினத்தினை சிறப்பித்து கிழக்குப் பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாகத்தில் ஓலைச்சுவடு, நடுகல், கல்வெட்டு, செப்பேடுகளில் தமிழ்மொழி : தமிழி என்ற தலைப்பிலான கலந்துரையாடல் நேற்று(21) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. 


இதன்போது தமிழ்மொழியின் வளர்ச்சி, இலங்கையில் அதன் பரவலாக்கம், கல்வெட்டுக்கள் கண்டுபிடிப்பு, பிராமி எழுத்துக்களின் செல்வாக்கு, ஓலைச்சுவடுகளின் செல்வாக்கு, அவை பற்றிய ஆய்வுகள் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

மேலும் இவ்வாறான வரலாற்று உண்மைகள் எதிர்காலத்தில் மக்கள் மத்தியிலும் இலகுவாக கொண்டு செல்லப்பட வேண்டும் எனவும் பேசப்பட்டது.

நுண்கலைத்துறையின்  தலைவர் வ.இன்பமோகன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் விரிவுரையாளர் சு.சந்திரகுமார், விரிவிரையாளர் கௌரி, மாணவர்கள் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.