(அனா)இலங்கையின் 68வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று (04.02.2016) நாடலாவிய ரீதியில் பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்கள் இடம் பெற்று வருகின்றது.
இதன் அடிப்படையில் கோறளைப்பற்று மற்றும் கோறளைப்பற்று மத்தி ஆகிய பிரதேச செயலகங்களில் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்த சுதந்திர தின நிகழ்வும் சிறமதான நிகழ்வும் இன்று இவ்விரு பிரதேச செயலகங்களிலும் இடம் பெற்றது.
இந் நிகழ்வுகளில், கோறளைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ரீ.தினேஸ், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மௌஜூத் உள்ளிட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.
கோறளைப்பற்று பிரதேசெயலகம்
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகம்



























