(படுவான் பாலகன்) மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி, பட்டிப்பளை, வவுணதீவு பிரதேசங்களை உள்ளடக்கிய படுவான்கரைப்பகுதியில் நெல் அறுவடை ஆரம்பித்துள்ள நிலையில் நெல்லுக்கான விலை மிகக்குறைவாகவே காணப்படுவதாக இப்பிரதேசத்து விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இப்பிரதேசத்தில் அறுவடை செய்யப்பட்டுள்ள நெல் 1400ரூபாய்க்கு குறைவாக கொள்வனவு செய்யப்டுவதாகவும் இதனால் தங்களது முதலீட்டை விட குறைவாகவே அறுவடை நெல் விற்கப்படுவதனால் நட்டம் ஏற்பட்டுள்தாகவும் குறித்த விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இவ்விசாய செய்கையின் போது அதிக மழையினாலும், நோயினாலும் நெல்வயல்கள் அதிகம் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சில வயல்கள் அறுவடை செய்யமுடியாலும் கைவிட்டுள்ளதாகவும் விவசாயிகள் குறிப்பிட்டனர்.













