மட்டக்களப்பு இலங்கை வங்கி வாடிக்கையாளர்களின் நலன்கருதியும் அவர்களிக் நேரத்தை மிகுதிப்படுத்தி வேலையை இலகுபடுத்துவதற்காக மட்டக்களப்பு நகரக் கிளையில் தானியங்கி பணம் வைப்பிலிடும். இயந்திரம் புதிதாக சேவையில் இணைத்துக் கொள்ளும் நிகழ்வு வங்கியின் முகாமையாளர் எம்-ஜ நௌபர் தலைமையில் இடம்பெற்றது.
இச்சேவையானது 24 மணிநேரமும் வங்கியினால் முன்னெடுக்கப்படவுள்ளது. இத்தானியங்கியங்கியினுள் பழைய நாணயத்தாள்கள் மற்றும் கள்ளக் காசுத்தாள்களை பயன்படுத்தி வைப்பிலிட முடியாது.
இவ்வங்கியில் உள்ள முகாமையாளர் நௌபர் சேவைக்கு வந்தததன் பின் தொழில்நுட்ப ரீதியான அபிவிருத்திசேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மதத் தலைவர்களின் நல்லாசியுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வில் வங்கி உயர் அதிகாரிகள் ஊழியர்கள் வாடிக்கையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.












