சுயதொழிலுக்காக தையல் இயந்திரங்கள் பயனாளர்களிடம் கையளிப்பு

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கௌரவ மு.இராஜேஸ்வரன் அவர்களின் 2015ம் வருட அபிவிருத்தி நிதி ஒதுக்கீட்டில் சுயதொழில் முயற்சிக்காக கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் வசிக்கும் பயனாளர்களுக்கு மாகாண சபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் அவர்களால்  தையல் இயந்திரங்கள் கையளிக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான கு.ஏகாம்பரம், அ.விஜயரெட்ணம், மாகாண சபை உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் வ.அழகரெத்தினம் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வு கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் திரு.கே.லவநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.