சுவாமி விபுலானந்த அழகியற்கற்கைகள் நிறுவக பொங்கல் விழாவும், பண்பாட்டு வெளிப்படுத்தல்களும்

மனித இருப்பில் அவர்களுடைய பாண்பாடும், அடையாளமும் முக்கியம் பெறுவது குறிப்பிடத்தக்கது. சமுதாயமானது பண்பாட்டினை முன்னிறுத்தியே தமது தனித்துவத்தினையும், அடையாளத்தினையும் பேணுகின்றமை உண்மை. இத்தன்மை அனைத்து சமுதாயத்திற்கும் பொருந்துவதோடு அவர்கள் தங்களின் அன்றாடச்செயற்பாடுகளில் அவற்றை செயற்பட வைக்கவும் தயங்கவில்லை. பழக்கமுறைகள், கலைச்செயற்பாடுகள், பண்டிகைகள், விழாக்கள் போன்ற பலவற்றினூடாக இவற்றைக் கொண்டு செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் தழிழர்கள் மத்தியில் அவர்களுடைய முன்னோர்கள் கூடுதலான செயற்பாடுகளை இவற்றில் மேற்கொண்டதோடு தங்களின் வாழ்க்கைச் செயற்பாட்டினூடாக முன்னெடுத்து வந்தனர். இதி;ல் தனிமனித, சமுதாய வாழ்க்கைகு தேவையான மிகவும் முக்கியமான அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவர்களின் பண்டிகைகள், விழாக்களில் கலைச்செயற்பாடுகள், விளையாட்டுக்கள், ஒன்றுசேர்தல், உண்டுமகிழ்தல், உற்றார், உறவினர் வீடுகளுக்கு சென்றுவருதல், பரிமாறல் எனப் பல அம்சங்கள் தொடர்ந்து செல்லும் எனலாம். 


தமிழர்களின் பண்டிகைகளின் ஒன்றான தைப்பொங்;கலை தமிழர்களின் மத்தியில் சிறப்பாக கொண்டாடுவதோடு ஏனையவர்களும் இணைந்து கொண்டாடுகின்றமை குறிப்பிடத்தக்கது.  அந்தவகையில் சிறப்பானதொரு பொங்கல் விழா ஒன்று கிழக்குப்பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற்கற்கைகள் நிறுவகத்தில் 06.02.2016ம் திகதி  அன்று இடம்பெற்றது. இதில் நிறுவகப் பணிப்பாளர், விரிவுரையாளர்கள், கல்விசார், கல்விசாரா உத்தியோகத்தர்கள் அனைத்துத்துறை மாணவர்கள், மற்றும் பொதுமக்கள் சிலர் என பலர் இணைந்த கொண்டாடியமை குறிப்பிடத்தக்கது.

இந்தப் பொங்கல் விழாவில் பாரம்பரிய பண்பாட்டின் வெளிப்படுத்தல்களை சிறப்பாக காணமுடிந்தது இயற்கையான முறையில் அரிசி, மா, தானியங்கள் போன்றவற்றை கொண்டு அழகான,நேர்த்தியான முறையில் கோலங்கள் பல இடப்பட்டு காணப்பட்டதோடு மா இலைகளாலும், தென்னங்குருத்துக்களாலும்; அலங்கரிக்கப்பட்ட தோரணங்களும் பாரம்பரியம், பண்பாட்டினை அப்படியே வெளிக்கொணர்ந்தது. பொங்கல் பானைகள் மாணவர்களின் இணைவுடன் பல பொங்கப்பட்டு சூரியனுக்கு படைக்கப்பட்டு வணக்கமுறைகள் இடம் பெற்று அனைவரும் உண்டு மகிழ்ந்ததோடு,பொங்கல் பாடல்களையும் பாடி மகிழ்ந்தனர்.இதில் கூடுதலாக ஆண்கள் வேஷ்டியும்,பெண்கள் சாறியும் அணிந்து இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து பாரம்பரிய விளையாட்டுக்களான கிளித்தட்டு,கயிறு இழுத்தல்,முட்டியுடைத்தல் போன்ற விளையாட்டுக்கள் பாரம்பரியம்,பண்பாட்டு ரீதியாக   இடம்பெற்றன. இவற்றில் மாணவர்களும், விரிவுரையாளர்களும் உற்சாகத்தோடும், சந்தோசத்தோடும் ஆண்களும், பெண்களும் இணைந்து செயற்பட்டமையோடு காலை தொடங்கி மாலை வரை இடம்பெற்ற பொங்கல் விழாவில்  பாரம்பரியம், பண்பாட்டின் வெளிக்கொணர்கை. சிறப்பானதாக காணப்பட்டது. 
அதனைத்தொடர்ந்து மாலை இடம்பெற்ற கலை நிகழ்ச்சிகளும் பாரம்பரியம்,பண்பாட்டினை  வெளிக்கொணர்வதாகவே அமைந்தது நாட்டார் நடனங்களும், நாட்டார் பாடல்களும், பொங்கலோடு இணைந்த ஆற்றுகை நிகழ்வுகளும் சிறப்பாக இடம்பெற்றன.
இந்த  பொங்கல் விழாவானது பாரம்பரியம்,பண்பாட்டினை வெளிப்படுத்தியது மாத்திரமின்றி மாணவர் மத்தியில் ஒற்றுமை, குழுவாகச்செயற்படல், விட்டுக்கொடுப்பு, ஒன்றிணைதல், புரிந்துகொள்ளுதல், அவதானம், உதவிசெய்யும் மனப்பாங்கு, தலைமைத்துவம்,கூச்சமின்மை போன்ற பல அம்சங்களை மாணவர்களுக்கு வழங்கியதுடன் மாணவர்கள் புதியதாக சிந்திப்பதற்கும் வழியமைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
வெறுமனே புத்தக படிப்பு மாத்திரமன்றி இவ்வாறான செய்முறை செயற்பாடுகள் மனதையும், உடலையும் வலுப்படுத்துவதுடன் எங்களை சுயமாகச் சிந்திக்கவும், செயற்படவும் வைக்கின்றது என்பதுடன்  நாம் வாழ்க்கைக்கு தேவையான பல அம்சங்களைப் புரிந்துகொள்ளவும், பெற்றுக்கொள்ளவும் இந்;த பழக்கமுறைகள், கலைச்செயற்பாடுகள், பண்டிகைகள், விழாக்கள் மூலம் முடிகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. 

இன்றைய சூழலில் இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவேண்டியதுடன் இவை ஒரு வகையான கற்றல் செயற்பாடும் கூட. எமக்கு புது விடயங்களைக் கற்றுத்தருவதுடன், சிறந்த ஆளுமை மிக்க அறிவாற்றலுடைய சமுதாயத்தினை உருவாக்குவதுடன் எமது பாரம்பரியம்,பண்பாட்டை சிறப்பாக பேணவும் வழியமைக்கின்றது என்பதில் சந்தேகமில்லை. 

கா. அற்புதன்