(படுவான் பாலகன்) மட்டக்களப்பு மாவட்ட மின்சார சபைக்குட்பட்ட விளாவெட்டுவான் கிராமத்தின் பண்ணை வீதியினுடாக செல்லுகின்ற மின்கம்பத்தில் இருந்து அறுந்து மின்சார வயர்கள் நிலத்தில் விழுந்து காணப்படுகின்றது.இரண்டு மாதங்களாக குறித்த வயர் நிலத்தில் அறுந்து விழுந்து காணப்படுவதாக இக்கிராம மக்கள் குறிப்பிடுகின்றனர்.
இவ்வீதியின் ஊடாக பாடசாலை மாணவர்கள், சிறுவர்கள், பெரியவர்கள் என பலரும் பயணம் செய்வதாகும். இவ்வயர்களில் மின்னிணைப்பு காணப்படுவதனால் ஆபத்துக்கள் ஏற்படுவதற்கும் வாய்ப்புக்கள் உள்ளதாகவும் தெரிவிக்கும் மக்கள் உடனடியாக இப்பிரச்சினையை தீர்த்துத்தருமாறும் கோரிக்கை விடுகின்றனர்.















