தொழிலுக்காக மத்தியகிழக்கு நாட்டுக்குச் சென்று நாடு திரும்புகையில் மட்டக்களப்பு கிரான் எனும் இடத்தைச் சேர்ந்த கிருஸ்ணப்பிள்ளை பிரபாகரன் எனும் இளைஞன் இன்று வியாழக்கிழமை (25) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவர் கடந்த 2006ம் ஆண்டில் தொழில் நிமிர்த்தம் கட்டார் நாட்டுக்கு சென்று பின்னர் கடந்த 2013ம் ஆண்டில் நாடு திரும்பி , அதே ஆண்டில் மீண்டும் தொழிலுக்காக குறித்த நாட்டுக்கு சென்று பின்னர் இன்று அதிகாலை 5.30 மணியளவில் நாடு திரும்புகையில் இலங்கை கட்டுநாயக்கா விமானநிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவரது கைது தொடர்பாக அவரது உறவினர்கள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசனிடம் அதிவித்ததையடுத்து அவர் இக் கைது தொடர்பாக நடவடிக்கை எடுத்துவருவதாக எமக்கு தெரிவித்தார்.













