முதல் 10தரவரிசைப்படுத்தலில் தமிழ்மொழிமூல மாணவர்க்கு அநீதியா? பகிரங்கப்படுத்துமாறு இ.த.ஆ.சங்கம் வேண்டுகோள்!

 (காரைதீவு நிருபர்)

நேற்று வெளியான க.பொ.த.சா.த. பரீட்சைப்பெறுபேற்றின்படி இம்முறை கூடுதலான மாணவர்கள் சித்தியடைந்திருப்பது வரவேற்புக்குரியது.அதேவேளை தேசியரீதியில் தரவரிசைப்படுத்தும்போது சிங்களமொழிமூல மாணவர்களை மாத்திரம் கவனத்திற்கொண்டுள்ளமை பாரபட்சமாகும். இது தமிழ்மொழிமூல மாணவர்க்கு இழைக்கப்படும் அநீதியாகும்.இது அவர்களது அடிப்படை உரிமையை மீறுகின்றசெயலாகும்.எனவே இதனை பகிரங்கப்படுத்துமாறு வேண்டுகின்றோம்.

இவ்வாறு கல்விஅமைச்சர் அகிலவிராஜ் காரியவாசத்திடம் இலங்கைத் தமிழர்ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
கல்வி இராஜாங்க அமைச்சர் பி.இராதாகிருஸ்ணன் இது விடயத்தில் தலையிட்டு தமிழ்மொழிமூல மாணவர்களது உரிமைகளைப் பாதுகாக்கவேண்டும் எனவும் கேட்கப்பட்டுள்ளது.
சங்கத்தலைவர் வி.ரி.சகாதேவராஜா விடுத்துள்ள வேண்டுகோளில் மேலும் தெரிவித்திருப்பதாவது:

தமிழ்மொழிமூல ஆசிரியர் மற்றும் மாணவர்களது உரிமைகள் மற்றும் நலன்களில் கவனம்செலுத்திவரும் பாரம்பரிய தொழிற்சங்கம் என்ற அடிப்படையில் இது விடயத்தில் அக்கறைசெலுத்தவேண்டிய கடமையும் பொறுப்பும் எமக்குள்ளது. அந்த வகையில் தங்களது கவனத்தை ஈர்க்கின்றோம்.

நாட்டிலே மூன்று மொழிமூலங்களில் பரீட்சையை நடாத்திவிட்டு சிங்களமொழிமூல மாணவர்களை மட்டும் தேர்ந்தெடுத்து மறுநாளே அலறிமாளிகைக்கு வரவழைத்து பாராட்டிக்கௌரவிப்பதென்பது கல்வியில் பாரபட்சம் காட்டப்படுவதற்கு ஒப்பானதாகும். இது தமிழ்மொழிமுல மாணவரது மனநிலையில் பாரியபாதிப்பை ஏற்படுத்தக்கூடியது.
கடந்த ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற இவ்வாறன அராஜக செயற்பாடுகள் இன்றைய நல்லாட்சியிலும் தொடர்வது முறையா?
சிங்கள மற்றும் தமிழ்மொழிமூல பரீட்சை முடிவுகளை ஒரு பட்டியலில் சேர்த்து தரப்படுத்துவதென்பது ஏற்புடையதல்ல. 
நாட்டில் சிங்களமொழிமூல பாடசாலைகள் தமிழ்மொழிமூல பாடசாலைகள் என இருவகுதி பாடசாலைகளே உள்ளன.அதுபோல இரு மொழிமூலத்தில் பரீட்சைகளும் நடைபெறுவது தெரிந்ததே. அப்படி இருமொழிமூலத்தில் நடாத்திவிட்டு ஒருமொழிக்குமாத்திரம் தரப்படுத்தல் பெறுபேற்றினை வெளியிடுவதென்பது பாரபட்சமாகும்.

அதற்காக இது பொதுவான தரப்படுத்தல் என்ற கருத்துக்கும் வரமுடியாது. அப்படியெனின் அந்த முதல் பத்தில் ஒருதமிi;மொழிமூல மாணவனாவது வர நிகழ்தகவு இல்லையா?
கருப்பாடங்களைப்பொறுத்தவரை ஒரே வினாக்கள் மூன்று மொழிகளிலும் அமையும். ஆனால் சிங்களம் தமிழ் சமயம் ஆகிய பாடங்களில் கேட்கப்படும் வினாக்கள்  இரு மொழிமூலத்திற்கும் வெ;வவேறானவையாகும். சிலசமயம் பௌத்தம் பாடத்திற்கான வினாக்கள் இலகுவாகவிருக்க இந்து அல்லது இஸ்லாம் பாடத்திற்கான வினாக்கள் கஸ்;டமாக இருக்கின்ற சந்தர்ப்பமும் வரலாம். 
இந்த சந்தர்ப்பத்தில் இவ்விரு பாடத்திற்கான புள்ளிகளை ஒரே பார்வையில் பார்த்து ஒரே பட்டியலில் தரப்படுத்துவதென்பது பொருத்தமல்ல .அவற்றைப் பொதுமைப்படுத்தமுடியாது என்பது சகலரும் அறிந்தவிடயமே.
இதைவிட இற்றைக்கு 06வருட காலத்திற்கு முன்பு தமிழ்மொழியில் முதலிடம் பெற்ற மாணவியாக காரைதீவைச்சேர்ந்த ச.சாலினி தெரிவாகியிருந்தார். அன்று அப்புள்ளியை வெளியிட்ட பரீட்சைத்திணைக்களத்திற்கு இன்று வெளியிடத்தயங்குவது ஏன்?
முதல் 10 நிலைகளில் ஒரு தமிழ்மொழிமூல மாணவனாவது வரமுடியாதா? அதற்கான நிகழ்தகவு ஏனில்லை? உயர்தரத்திலும் பல்கலையிலும் சாதனை படைக்கின்ற தமிழ் மாணவர்கள் ஏன் இப்பரீட்சையில் சாதனை படைத்திருக்கமுடியாது? எங்கோஓரிடத்தில் முதல் தமிழ்மாணவனின் உச்சப்புள்ளி வந்திருக்கவேண்டுமே. அது எங்கே?
எனவே ஒவ்வொரு மொழிமூலத்திற்கும் தனித்தனியாக தரநிலைப்படுத்தல்கள் வெளியிடப்படவேண்டும். அது பகிரங்கமாக வெளியிடப்படவேண்டும். அதேவேளை மாவட்ட நிலை தரப்படுத்தல்களும் வெளியிடப்படவேண்டும். எதனையும் பகிரங்கமாக வெளிப்படுத்தினால் எவருக்கும் சந்தேகம் எழாது. இது போட்டிப்பரீட்சையல்ல.
கடந்த ஆண்டுகூட தமிழ்மொழிமூல தரநிலைப்படுத்தலைக்கோரியபோது அது நாம் ஆய்வுக்காக மாத்திரமே செய்வோமே தவிர வெளிப்படுத்துவதற்கல்ல என பரீட்சைத்திணைக்கள ஒரு பெண்அதிகாரி தெரிவித்தார். வெளியிட்டால் என்ன குறை? மாணவர்க்கு உற்சாகம்தானே! என்றதற்கு அவர் மௌனமாகிவிட்டார். 
சிங்களமொழிமூலம் வெளியிடப்படலாம் என்றால் தமிழ்மொழியில் ஏன் அது வெளியிடப்படக்கூடாது என்ற நியாயமான கேள்வியை அவர் உணரத்தவறிவிட்டார்.

இன்னுமொரு கருத்துமுள்ளது மதிப்பீட்டில் தமிழ்மொழிமூல மதிப்பீட்டாளர்கள் சற்றுஇறுக்கமான போக்கைக் கடைப்பிடிப்பதாகவும் அதற்கு மாறாக மற்றமொழி மதிப்பீட்டாளர்கள் செயற்படுவதாகவும் பொதுவாக பேசப்படுவதுண்டு. இது ஆய்வுக்குரியதென்றாலும் ஆராயப்படவேண்டியதொன்று.
சிங்களமொழிமூல மாணவரின் திறமையையும் பெறுபேற்றையும் நாம் சந்தேகம்கொள்ளவில்லை என்றாலும் தமிழ்பேசும் மாணவச்சமுகம் புறக்கணிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது. கல்வியில் தரப்டுத்தல்கள்தான் கடந்தகால யுத்தத்தின் அடிநாதம் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது.
யுத்தம் மௌனிக்கப்பட்டபின் அமைதியான சூழலில் பரீட்சை இடம்பெற்றிருப்பதால் கணிசமான தமிழ்மாணவர்கள் சிறந்த தேர்ச்சிகளைக்காட்டியுள்ளமை பாராட்டுக்குரியது.

எட்டுப்பாடங்களிலும் 8ஏ எடுத்த  மாணவர்களில் 90வீதமானோhர் 9வது பாடத்தில் அடுத்த கட்டப் பெறுபேற்றைப் பெற்றிருப்பது என்றால் அது  இந்த ஆங்கிலப்பாடத்திலாகும். அது அவர்களுக்கு மிகுந்த மனவேதனையையும் உளப்பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ளதென்றால் மிகையல்ல.எனவே ஆங்கில பாட வினாத்தயாரிப்பு தொடர்பில் ஆய்வுசெய்யப்பட வேண்டியதவசியமாகும். இது தமிழ்பாடத்திற்கும் பொருந்தும். 


எனவே தரப்படுத்தலில் தமிழ்மொழிமூலத்தரப்படுத்தல் தனியாக வெளியிடப்படவேண்டும்.