மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளருக்கு தேசப்பிரியை விருது

(படுவான் பாலகன்) பட்டிப்பளைப்பிரதேச கலை இலக்கிய சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று(19) சனிக்கிழமை இடம்பெற்ற மகளிர் தின நிகழ்வில் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் சத்தியானந்தி நமசிவாயத்திற்கு தேசப்பிரியை விருது வழங்கி வைக்கப்பட்டது. 

மண்முனை தென்மேற்கு பிரதேசத்தின் செயலாளராக கடமையேற்று பிரதேசத்தின் வளர்ச்சியிலும், பிரதேச மண்வாசனை, பண்பாடு, உணவுப்பழக்கவழக்கம் என்பவற்றில் பாராம்பரியங்கள் கடைப்பிடிக்க வேண்டும். கல்வியில் முன்னேற வேண்டும் என்பதில் மிகவும் ஆர்வத்தோடு செயற்பட்டமையுடன் அனைவரையும் அரவணைத்து செல்கின்றமையும் கௌரவித்து பொன்னாடை போர்த்தி தேசப்பிரியை விருதும் பிரதேச செயலாளருக்கு வழங்கப்பட்டது.

இவ்விருதினை பிரதேச செயலாளருக்கு மட்டக்களப்பு மேற்கு வலய உதவிக்கல்விப் பணிப்பாளர் ரஞ்சிதமலர் கருணாநிதி வழங்கி வைத்தார்.