(படுவான் பாலகன்) மண்முனை தென்மேற்கு பிரதேச மக்களிற்கு இலகு சேவையை வழங்கும் பொருட்டு கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட நடமாடும் சேவை சனிக்கிழமை(28) முதலைக்குடா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகம், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் போன்வற்றுடன் இணைந்து மேற்கொண்ட நடமாடும் சேவையில் பொலிஸ் திணைக்களத்தினால் அடையாள அட்டை, கடவுச்சீட்டு போன்றவற்றிற்கான முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளல் என்பனவும் சுகாதார சேவைகள் திணைக்களத்தினால் தொற்றா நோய்களுக்கான பரிசோதனைகள், மற்றும் கிராமசேவை அலுவலர்களின் சேவைகளும் வழங்கப்பட்டது.
இங்கு வழங்கப்பட்ட சேவைகளை நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு பெற்றுக் கொண்டனர்.












