மட்டக்களப்பு - மட்டிக்கழி அருள்மிகு ஶ்ரீ திரௌபதாதேவி ஆலய வருடாந்த மகோற்சவம்

(சுகிவர்ணன்)
மட்டக்களப்பில் புகழ்பெற்ற ஆலயமாக திகழும் மட்டிக்கழி அருள்மிகு ஶ்ரீ திரௌபதாதேவி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று 18ஆம் திகதி வௌ்ளிக்கிழமை ஆரம்பமானது.

அம்பாளின் உற்சவம் எட்டு நாட்கள் கொண்ட திருவிழாவாக இடம்பெறும். இதில், 6ஆம் நாள் விழா 23ஆம் திகதி புதன்கிழமை வனவாச திருவிழாவும், 7ஆம் நாள் 24ஆம் திகதி தவநிலை திருவிழாவும், 25ஆம் திகதி வௌ்ளிக்கிழமை பிற்பகல் 5.00மணிக்கு விஷேட வைபவமாக தீ மிதிப்பு வைபவம் இடம்பெற்று மறுநாள் 26ஆம் திகதி சனிக்கிழமை காலை கும்பம் சொரிதலுடன் உற்சவம் நிறைவுபெறும்.

மகோற்சவ காலத்தில் தினமும் பகல் பூசை 2.00மணிக்கும் இரவுப் பூசை 8.00மணிக்கும் அம்பாளின் பூசைகள் இடம்பெறும்.