உயர்கல்வி நிறுவனங்களின் வகிபாகம் குறித்த புலமைத்துவ கருத்தாடல் களம்

சமூகங்களின் உரிமத்தினையும் நிலைத்துநிற்கும் காத்திரமான அதன் விருத்தியினையும் வலுப்படுத்துவதில் உயர்கல்வி நிறுவனங்களின் வகிபாகம் குறித்த புலமைத்துவ கருத்தாடல்களுக்கு களம் அமைக்கும் நோக்கில் சுவாமி விபுலாநந்த அழகியற் கற்கைகள் நிறுவகப் பணிப்பாளர் அலுவலகம் அதிதி உரைத் தொடரை நடாத்தி வருகின்றது.

இதன் மூன்றாவது உரையானது 02.03.2016 திகதி புதன்கிழமை  பிற்பகல் 6.00 - 8.00 மணிவரை, கல்லடி சு.வி.அ.க. நிறுவக இராஜதுரை அரங்கில்   கலாநிதி தர்ஷன் அம்பலவாணர் (Independent Scholarh)அவர்களால் நிகழ்த்தப்படவுள்ளது.
இன்றைய நிலையில் உயர் கல்வி நிறுவனங்களின் பங்கும்     பொறுப்பும் (The Role and Responsibility of the Academy     (University) Today) என்ற தலைப்பில் இடம்பெறவுள்ள கருத்தாடல் களத்தில் வரவேற்புரையை       தலைவர், நடன நாடகத்துறை  திருமதி. சர்மிளா ரஞ்சித்குமார்,  தலைமையுரையை சு.வி.அ.க. நிறுவக பணிப்பாளர் கலாநிதி சி. ஜெயசங்கர், அறிமுக உரையை நடன நாடகத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி. ஜெயரஞ்சினி ஞானதாஸ், நன்றியுரையை   நடன நாடகத்துறை விரிவுரையாளர்  க. மோகனதாசன் ஆகியோர் நிகழ்த்தவுள்ளனர் என சு.வி.அ.க. நிறுவக பணிப்பாளர் அலுவலகம்,  கிழக்குப் பல்கலைக்கழகம் தெரிவித்தனர்.