மாணவர்களின் கற்றல் ஆற்றலை மேம்படுத்தும் கருத்தரங்கு

(சுகிவர்ணன்)

கல்வி அமைச்சின்கீழ் இயங்கும் தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபைனால் மாணவர்களின் கற்றல் ஆற்றலை மேம்படுத்தும் கருத்தரங்கு செவ்வாய்கிழமை  15.03.2016 திகதியன்று ஏறாவூர்  தமிழ் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் கல்வி பகுதி பிரிவின் தலைவர் எம்.டபிள்யூ.அரவிந்த தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில்  கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட உதவி நூலகர் ஜெயராஜ், பாடசாலை அதிபர் கே.உதயகுமார், தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் அதிகாரிகளான சீ.எம்.ஷபீக், எம்.எஸ்.எம்.ஷிகாம்  போன்றேர் கலந்துகொண்டு கருத்துரைகள் வழங்கினர்.

இவ்வாறான கருத்தரங்குகள் நடளாவிய ரீதியில் தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபைனால் முன்னெடுக்கப்பட்டுவருவதாக சபையின் கல்விப் பிரிவுக்கான தலைவர் எம்.டபிள்யூ. அரவிந்த தெரிவித்தார்.