"சிறுவர் உரிமைகளுக்காக பரிந்துரைப்போம்" எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற சிறுவர் பாராளுமன்ற நிகழ்வுகள்

மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் அபிவிருத்திக்குழு, பிரதேச மற்றும் மாவட்ட சிறுவர் சபைகளின் ஏற்பாட்டில் "சிறுவர் பாராளுமன்ற நிகழ்வுகள்" இன்று (05.03.2016) தன்னாமுனை மியாமி மண்டபத்தில் இடம்பெற்றது.

"சிறுவர் உரிமைகளுக்காக பரிந்துரைப்போம்" எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இந்நிகழ்வின் அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். கிரிதரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர் .

இக்காலத்தில் சிறுவர்கள் எதிர் நோக்கும் சவால்கள், சிறுவர்கள் மீதான வன்முறைகள், பாலியல் சுரண்டல்கள் தொடர்பாகவும் விவாதங்களும் அவை சார்ந்த விழிப்புணர்வு நாடகங்களும் இடம்பெற்றன.

இந் நிகழ்வில் சிறுவர் விவகாரங்கள், சிறுவர் நன்னடத்தை சார்ந்த அதிகாரிகள், மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிறுவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.