''வலுவான பெண் -நிலையான நாளைய தினம்''- சர்வோதய இயக்கத்தின் மகளிர் தின நிகழ்வு

(சுகிவர்ணன்)
மட்டக்களப்பு சர்வோதய இயக்கத்தின் மகளிர் தின நிகழ்வு சத்துருகொண்டான் சர்வோதய நிலையத்தில் சனிக்கிழமை இடம்பெற்றது. 

சர்வோதய மகளிர் இயக்கத்தின்ஏற்பாட்டில் இடம்பெற்ற இந் நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் திருமதி.கே.பாரதி, சர்வோதய பெண்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் கீதானி சூரியபண்டார , சர்வோதய இயக்கத்தின் மட்டக்களப்பு பிராந்திய இணைப்பாளர் இ.எல்.ஏ.கரீம் உள்ளிட்டோர் கலந்து சிறப்பித்தனர்.

 இதன்போது, மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலிருந்தும் வருகைதந்த மகளிர் அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட சுமார் 500க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர்.

 இந் நிகழ்வில், 'சமத்துவத்திற்கான உறுதிமொழி' ,வலுவான பெண் - நிலையான நாளைய தினம்' எனும் பொருளுக்கமைவாக நிகழ்வுகள் இடம்பெற்றது.