மாணவர்கள் கல்வியை போன்று விளையாட்டு திறனை வளர்பதிலும் அக்கறை செலுத்த வேண்டும் - மு.இராஜேஸ்வரன்

நற்பிட்டிமுனை விவேகானந்தா வித்தியாலய இல்ல விளையாட்டு போட்டி அண்மையில் பாடசாலை மைதானத்தில் வெகு சிறப்பாக பாடசாலை அதிபர் திரு. சபா ரெட்ணம் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மாகாண சபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் கலந்து சிறப்பிருந்தார்.

அங்கு உரையாற்றிய மாகாண சபை உறுப்பினர்,

மாணவர்கள் கற்றல் செயற்பாடுகளில் காட்டும் அக்கறையை போன்று தமது விளையாட்டு திறன்களையும் விருத்தி செய்வதுக்கு அக்கறை காட்ட வேண்டும். இதற்க்கு ஆசிரியர்களும், பெற்றோரும் மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும்.

கடந்த மாதங்களில் சற்று உடல் நலக்குறைவால் எமது மக்களுக்கான சேவையில் சற்று கவனம் செலுத்த முடியவில்லை, எதிர்வரும் மாதங்களில் எனது சேவை வழமை போன்று இறைவனின் துணையுடன் செயற்படுவேன்.

என்று மாகாண சபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் உரையாற்றியிருந்தார். இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்கள்,ஆசிரியர்கள்,பெற்றோர்கள், மற்றும் எராளமான பொது மக்களும் கலந்துகொண்டிருந்தனர்.