(படுவான் பாலகன்) மட்டக்களப்பு கல்லடி சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக நடன நாடக துறை நடாத்தும் உலக நாடக தின விழா எதிர்வரும் 27,28.03.2016( ஞாயிறு, திங்கள்) ஆகிய தினங்களில் காலை 09.30மணி தொடக்கம் மாலை 08.00மணி வரை இடம்பெறவுள்ளது.
நாடக தின நிகழ்வில் பறைமேளக்கூத்து, பாரம்பரிய இசை அரங்க நிகழ்வுகள், கண்காட்சி;. இமயத்தை நோக்கி நெடுநாடகம், அரங்கப்பாடல், நான்விரும்பாத தியாகி ஒருவர் குறுநாடகம், போர்க்களம் கூத்து, வந்துபோதல் குறுநாடகம், அலங்கார ரூபன் தென்மோடி என்பன ஞாயிற்றுக்கிழமையும், உலவைப்போர் நெடுநாடகம், அரங்கப்பாடல்கள், முகப்போலிகள் குறுநாடகம், கலந்துரையாடல், பாடம் நெடுநாடகம் போன்ற நிகழ்வுகள் திங்கட்கிழமையும் நடைபெறவுள்ளது.
நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சி.செயசங்கர் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் த.ஜெயசிங்கம், சிறப்பு விருந்தினர்களாக கலாநிதி சி.மௌனகுரு, கலாநிதி வ.இன்பமோகன் கௌரவ அதிதிகளாக க.பரசுராமன், வெ.பரமக்குட்டி, ஐ.அரசரெட்ணம் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளதாக ஏற்பாட்டுக்குழுவினர் தெரிவித்தனர்.

















