செங்கலடி விவேகானந்தா வித்தியாலய மாணவர்களின் கற்றல் தொடர்பான களப்பயணம்


மட்டக்களப்பு கல்குடா  கல்வி வலயத்தில் அமைந்துள்ள செங்கலடி விவேகானந்தா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் தரம் 9, 10 மாணவர்கள் ஒரு நாள் களப்பயணத்தினை மேற்கொண்டு 15 - 3 - 2016 செவ்வாய்க்கிழமை வாகனேரியில் அமைந்துள்ள குளம், மற்றும் வாகனேரி கோகுலம் வித்தியாலய பாடசாலைக்கும் பயணத்தினை மேற்கொண்டனர். 


இதன் போது புவியியல் பாடம் தொடர்பான மேலதிக செய்முறை விளக்கத்தினை பெற அங்குள்ள குளம், மலைகள், நதிகளைப் பார்வையிட்டு, பின்னர் கோகுலம் வித்தியாலயத்தில்  கல்வி பயிலும் சக வகுப்பு மாணவர்களுடனும் கலந்து கொண்டு  பல நிகழ்ச்சிகளிலும் இணைந்து திறமைகளையும் ,இருபாலாரும் வெளிப்படுத்தினர்.


நிகழ்வின் முடிவில் விவேகானந்தா வித்தியலம்  சார்பில் நினைவுப் பரிசில்களும் பாடசாலைக்கு வழங்கி வைக்கப்பட்டது.