கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் சிறுவர், மகளிர் பிரிவு கட்டிடம் திறப்பு.

(படுவான் பாலகன் ) ஜப்பானிய மக்களின் நிதியுதவியுடன் பிளான் ஜப்பான் காரியாலய அனுசரணையுடன் பிளான் இன்டநெசனல் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் அமுலாக்கலுடன் பொலிஸ் திணைக்களத்தின் வழிகாட்டலில் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவில் ரூபா 3281215.44முதலீட்டில் அமைக்கப்பட்ட கட்டிட திறப்பு விழா இன்று(23) புதன்கிழமை இடம்பெற்றது.


மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் உபாலி ஜெயசிங்க மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஸ் ஆகியோர் திறந்து வைத்தனர்.

கட்டிடத்தினை பொலிஸ் திணைக்களத்தின் மக்களின் சேவைக்காக கிழக்கு பிராந்திய பிளான் இன்டநெசனல் நிறுவன ஆலோசகர் ராமமூர்த்தி கொக்கட்டிச்சோலை பொலிஸ் பொறுப்பதிகாரி பெர்ணாண்டோவிடம் கையளித்தார்.

இதன்; போது மகிழடித்தீவு சரஸ்வதி வித்தியாலய மாணவர்களது நாடகமும் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் உபாலி ஜெயசிங்க மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஸ், பொலிஸ் பொறுப்பதிகாரி பெர்ணாண்டோ பிளான் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள், மதத்தலைவர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொலிஸ்நிலைய உத்தியோகத்தர்கள் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.