திராய்மடு, பாலமீன்மடு பகுதிகளைச் சேர்ந்த பொது அமைப்புக்களின் ஒன்றியம் ஏற்பாடுசெய்திருந்த இவ் ஆர்ப்பாட்டத்தில் முகத்துவாரம்,திராய்மடு மற்றும் பாலமீன்மடு போன்ற கிராமங்களைச்சேர்ந்த பெருமளவிலான மக்கள் கலந்துகொண்டனர்.
மனிதக் கழிவுகளை எரியூட்டும் கட்டடம் இவ்விடத்தில் அமைப்பதால் அருகிலுள்ள ஆலயங்கள், மக்களுக்கு எதிர்காலத்தில் பாதிப்புக்கள் ஏற்படும் இதனால் இவ்விடத்தில் இத் திட்டத்தைஅமைப்பதை கைவிடவேன்டும் எனவும் ஐம்பது வீட்டுத்திட்டத்தின்கீழ் கடந்த காலத்தில் மீனவர்களுக்கு வழங்கிய வீடுகள் சுனாமி பிரதேசம் எனக் கூறி அரசாங்கம் மீளப் பெற்றுக்கொண்டு அதனை தனியார் ஒருவருக்கு சுற்றுலாவிடுதி அமைக்க எடுக்கப்படும் முயற்சி தடுத்து நிறுத்தவேன்டும். இக் காணிகளையும் வீடுகளையும் மீள பெற்றுத்தரவேன்டும் எனவும், மக்களுக்காக சேவையாற்றும் அரசாங்க அதிகாரிகள் மக்களதும் மக்கள் பிரதிநிதிகளதும் ஆலோசனைகளையும் உள்வாங்கி அபிவிருத்திகளை மேற்கொள்ளவேன்டும். எனவும் ஆர்பாட்டத்தில் கலந்துகொண்ட மக்களும் பொது அமைப்புக்கள் ஒன்றிய பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
இதேவேளை இங்கு வருகைதந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் மற்றும் கிழக்கு மாகாண சபை பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் போன்றோரிடம் இப் பிரச்சனைகள் பற்றிய மகஜரும் கையளிக்கப்பட்டது.
மகஜரை பெற்றுக்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் அம் மக்கள் மத்தியில் கருத்துத் தெரிவிக்கையில்,
கழிவுகளை எரியூட்டும் கட்டடம் அமைப்பது அவசியமானதொன்றாகும் ஆனால் அது பொருத்தமான இடத்தில் அமைக்க வேன்டும். இப் பிரதேச அபிவிருத்தி அமைப்புக்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பிரதேச மக்களின் ஆலோசனை எதுவும் பெறாது இத் திட்டத்தினை மட்டக்களப்பு மாநகரசபையால் மேற்கொண்டுள்ளதாக அறிகின்றேன். இந்த இடம் பொருத்தமில்லை என இப் பிரதேச மக்கள் கூறுவதால் எதிர்காலத்தில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு பொருத்தமான இடத்தை அனைவரதும் ஆலோசனைகளையும் பெற்று அமைக்கவேன்டும். எனவும் மீனவர்களின் வீட்டுப் பிரச்சனையினை உரிய அமைச்சருக்கு முன்வைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.












