வவுணதீவு பிரதேசத்தில் ஐ.எம்.ஓ அமைப்பினால் உதவி

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு பிரதேசத்தில் அனர்த்தங்களால் சேதமான வீடுகள் மற்றும் குடிசை வீடுகளையுடைய மக்களுக்கு ஐ.எம்.ஓ சர்வதேச அகதிகளுக்கான அமைப்பினால் கூரைத்தகடுகள், கூரை விரிப்புக்கள்,அரிக்கன் விளக்கு மற்றும் பாய்கள் உள்ளிட்ட பொருட்கள் இன்று(29) செவ்வாய்கிழமை வழங்கிவைக்கப்பட்டது.

இதன்போது இப் பிரதேசத்திலுள்ள 100 குடும்பங்களுக்கு பதினைந்து இலட்சம் ரூபா பெறுமதியான உபகரணங்கள் வவுணதீவு பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட த.தே.கூ பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன், மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன்,பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் மற்றும் ஐ.எம்.ஓ அமைப்பின் பிராந்திய பொறுப்பு உத்தியோகத்தர் எம்.ஜெயராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மக்களுக்கு பொருட்களை வழங்கிவைத்தனர்.