மட்டக்களப்பு வாகனேரி இத்தியடி விநாயகர் ஆலயத்தில் விநாயகர் பிரதிஸ்டை பிரதேச மக்களினால் நேற்று சனிக்கிழமை வெகு விமர்சையாக மேற்கொள்ளப்பட்டது.
மேற்படி கிராமத்தில் உள்ள குறித்த ஆலயத்தின் விநாயகர் உருவக்கல் கடந்த வருடம் ஜப்பசி மாதம் 2 தடவைகள் சில விசமிகளினால் பற்றைக் காட்டுக்குள் தூக்கி வீசப்பட்டது.
மேற்படி நடவடிக்கைக்கு எதிராக பிரதேச மக்களினால் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன் நிமிர்த்தம் இவ்வாலய பூசை வழிபாடுகளை மேற்கொள்வதில் பிரதேச மக்கள் பெரும் சிரமத்தினை எதிர்நோக்கி வந்தனர். இது தொடர்பாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஞா.கிருஸ்ணப்பிள்ளையிடம் ஆலய நிருவாக சபையினரிடம் விடுத்த வேண்டுகோளின் பேரில் உறுப்பினரினால் எடுத்த முயற்சியின் பலனாக விநாயகர் உருவச் சிலை வழங்கி வைக்கப்பட்டது.
அத்துடன் ஆலய வளவினை மேலும் விஸ்சரித்து செய்து தருவது தொடர்பாக கிரான் பிரதேச செயலாளருடன் தொடர்பு கொண்டு நடவடிக்கை மேற்கொண்டிருந்தார்.
இவ் விநாயகர் உருவச் சிலை சனிக்கிழமை ஆலய நிருவாக சபையினரினால் வாகனேரி சித்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து கிராமத்தில் பல்வேறு வீதிகளி;ன் ஊடாக ஊர்வலமாக எடுத்துச் வரப்பட்டு இறுதியில் இத்தியடி விநாயகர் ஆலயத்தில் வெகுவிமர்சையாக விநாயகர் பிரதிஸ்டை செய்யப்பட்டது.
இவரது சேவையைப் பாராட்டி கிராம மக்கள் நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர். நிகழ்வின் இறுதியில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஞா.கிருஸ்ணப்பிள்ளையினால் பொது மக்கள் மத்தியில் உரையாற்றப்பட்டது.












