திருகோணமலை டைக் வீதி பகுதியில் உள்ள கடற்பரப்பில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவினர் தெரிவித்தனர்.
நேற்றைய தினம் இருவர் குறித்த கடற்பகுதியில் நீராடச் சென்றுள்ளதுடன் அவர்கள் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
69 வயதான பண்டாரவளை பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம் பிரேதப் பரிசோதனைகளுக்காக திருகோணமலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் திருகோணமலை துறைமுக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.













