முனைக்காடு உக்டா பண்ணையில் இயற்கை விவசாய அறுவடை நிகழ்வு

(படுவான் பாலகன்) மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட முனைக்காடு உக்டா பண்ணையில் இயற்கை விவசாய நெல் அறுவடை நிகழ்வு இன்று(04) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

முதல் நெல் அறுவடையினை வைபவரீதியாக மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் சத்தியானந்தி நமசிவாயம் அறுவடை செய்து ஆரம்பித்து வைத்தார்.


உக்டா நிறுவனத்தினால் பிரதேசத்தில் இயற்கை விவசாயத்தை அறிமுகப்படுத்தும் நோக்கில்  கடந்த 4வருடங்களாக மாதிரி பண்ணையொன்றினை உருவாக்கி இயற்கை முறையில் விவசாயத்தினை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர்.

நஞ்சு தன்மையான உணவுகளே மேலெழுந்துள்ள தற்கால சூழலில் எவ்விதமான நஞ்சு கிருமிநாசினிகளையோ, பசளைகளையோ பயன்படுத்தாது முழுமையாக இயற்கை பசளைகளை மாத்திரம் பயன்படுத்தி இயற்கை முறையில் விவசாயத்தினை இந்நிறுவனம் மேற்கொள்ளுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.மேலும் இயற்கை முறையில் விவசாயத்தை செய்கை பண்ண விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் இயற்கை விவசாய பயிற்சிகளையும் உக்டா நிறுவனம் விவசாயிகளுக்கு ஏற்படுத்தி வழங்கி வருகின்றது.

உக்டா நிறுவனத்தின் தலைவர் இ.குகநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் சத்தியானந்தி நமசிவாயம், வேள்ட்விஸன் நிறுவன திட்ட இணைப்பாளர் கீத், உக்டா நிறுவன ஆலோசகர் பொ.நேசதுரை, செயலாளர் சி.கங்காதரன், நிறுவன உத்தியோகத்தர்கள், பிரதேச விவசாயிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.