பாலியல் தொற்று நோய்கள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்வு

(சுகிவர்ணன்)
​கோறளைப்பற்று தெற்கு இளைஞர் கழக சம்மேளனத்தினால் பிரதேச இளைஞர்களுக்கான ஆளுமை விருத்தி வேலைத்திட்டம் கிரான் இளைர' கழக சம்மேளனத் தலைவர் எம்.தினேந்திரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பாலியல் தொற்று நோய்கள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.

வேள்ட் விஷன் நிறுவனத்தின் உதவியுடன் இடம்பெற்ற இந் நிகழ்வில், மட்டக்களப்பு R.D.H.S அலுவலகத்தின் கீழ் இயங்கும் சுகநேய வைத்திய நிலையத்தினால் HIV/AIDS(எய்ட்ஸ்) பாலியல் தொற்று நோய்கள் பற்றியும் அவை பரவும் விதம், அதனை தடுக்கும் வழிகள் பற்றியும் விளக்கமளிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் சுகநேய வைத்திய பிரிவின்(STD Clinic) பொது சுகாதார பரிசோதகர் எம்.தயாளன் கலந்துகொண்டு இந் நோய்கள் பற்றி விளக்கமளித்தார்.


இதன்போது, கோறளைப்பற்று தெற்கு இளைஞர் சேவை அதிகாரி த.விந்தியன் புள்ளிவிபரவியல் உத்தியோகத்தர் க.கயல்வேந்தன், தகவல் நிலைய பொறுப்பு உத்தியோகத்தர் த.மகேந்திரன், வேள்விஷன் நிறுவன முகாமையாளர் (கிரான் பிராந்தியம்) திருமதி இந்து றோகாஸ்,திட்டப் பணிப்பாளர் எஸ்.அகிலானந்தம்  மற்றும் பிரதேச இளைஞர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.