பிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் உட்பட நால்வரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பில் பிள்ளையான் உட்பட நான்கு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 
 சந்தேகநபர்கள் நால்வரும் மட்டக்களப்பு நீதவான் மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில் இன்று காலை ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது சந்தேகநபர்கள் சார்பாகவும், குற்றப்புலனாய்வுப் பிரிவினராலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டதுடன், அவற்றை ஆராய்ந்த பின்னர், சந்தேகநபர்களை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.