(படுவான் பாலகன்) கிழக்கிலங்கையில் வரலாற்று சிறப்புமிகு கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் இந்து மக்களால் அனுஸ்டிக்கப்படும் சிவனுக்குரிய மகாசிவராத்திரி விரதப்பூசைகள் மந்திர ஒலிகள், மேளதாளங்கள் முழங்க இடம்பெற்றது.
ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்தக்குருக்கள் தலைமையிலான ஆலய குருக்கள்களான சிவஸ்ரீ வ.சோதிலிங்கம், சிவஸ்ரீ.சுதர்மன் ஆகியோரினால் நான்கு ஜாமபூசைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன்போது யாகங்கள் வளர்த்து, தீபதூபங்கள் காட்டப்பட்டு மந்திரஒலிகளும் உச்சரிக்கப்பட்டது.
இப்பூசை நிகழ்வுகளை கண்டுகளிக்கும் நோக்கில் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்த அடியார்கள் வருகைதந்திருந்தனர்.
சிவராத்திரி பூசை நிகழ்வுகளை சிறப்பிக்கும் வகையில் உபயகாரர்களாகிய உலகிப்போடி குடிமக்களின் அனுசரணையில் வெல்வூட் நுண்கலைப்பிரிவினரின் பக்தி இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.












