(படுவான் பாலகன்) நாற்பதுவட்டை, தாந்தாமலை, கச்சக்கொடிசுவாமி மலை, வில்லுக்குளம் போன்ற கிராமங்களை சேர்ந்த மீனவர்களுக்கு தோணி வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று(08) செவ்வாய்க்கிழமை நாற்பதுவட்டை மீனவர் சங்க கட்டிட வளாகத்தில் நடைபெற்றது.
வேள்ட்விஸன் நிறுவனத்தின் 576,000செலவில் ஒன்று 36000ரூபாய் பெறுமதியான தோணிகள் வில்லுக்குளம் மீனவர்களுக்கு இரண்டும் புளுகுணாவைகுள மீனவர்களுக்கு எட்டும், கங்காணியார்குள மீனவர்களுக்கு ஆறு தோணிகளுமாக 16தோணிகள் வழங்கி வைக்கப்பட்டது. குறித்த நிறுவனத்தினால் வில்லுக்குளம், புளுகுணாவை, கங்காணியார் குளங்களை சேர்ந்த மீனவர்களின் வருமானத்தினை மேம்படுத்தும் பொருட்டு 2மில்லியன் ரூபாய் இதுவரை செலவு செய்யப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் முகாமையாளர் இ.மைக்கல் குறிப்பிட்டார்.
புளுகுணாவை குளத்தினை பயன்படுத்தி நான்கு மாதத்திற்குள் 5532கிலோ கிராம் மீன் விற்பனை செய்து 837,300ரூபாய் வருமானம் பெறமுடிந்துள்ளதாக மீனவ சங்க தலைவர் இதன்போது தெரிவித்தார்.
இந்நிகழ்வில் தேசிய மீன்பிடி விரிவாக்கல் சபையின் பணிப்பாளர் கே.புஸ்பலதா, மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் சத்தியானந்தி நமசிவாயம், மாவட்ட மீன்பிடிவிரிவாக்கல் பொறுப்பாளர் ஜே.நெல்சன், வேள்ட்விஸன் நிறுவன பட்டிப்பளை பிராந்திய அபிவிருத்தி திட்ட முகாமையாளர் இ.மைக்கல், திட்ட இணைப்பாளர் சி.நிருமிதன், செயலக உத்தியோகத்தர்கள், கிராமசேவை உத்தியோகத்தர்கள், மீனவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.












